ரஜினி சொன்ன 12 செய்திகள்!


டிசம்பர் 12-12-12 அன்று ரஜினிக்கு பிறந்தநாள் தேதி, மாதம், வருஷம் எல்லாமே 12-ஆக அமைந்தது தனிச்சிறப்பு ஆகவே ரஜினியைப்பற்றி அவரே சொன்ன 12-செய்திகள் இங்கே…

தெய்வம்…

” பெங்களூர்ல இளமையான காலத்துல ஒரு தடவை வீட்டுல இருக்குறவங்க எல்லாரும் மோசமா திட்டுனாங்க. மனசே வெறுத்துப் போச்சு.. பேசாம தற்கொலை பண்ணிக்கிற முடிவுக்கு வந்தேன். சாகறத்துக்கு முன்னாடி எனக்கு ரொம்ப பிடிச்ச ஃப்ரெண்ட் ஒவியர் ரமேஷை பார்க்கனும்னு தோணுச்சு. அவரோட வீடுதேடி போனேன்.. அவர் அங்கே இல்லை. அனுமார் மலைக்கோயிலுக்கு போனதா சொன்னாங்க. தேடிப்போனேன் மலையில் இருக்குற பாறையில விதவிதமா ஒவியம் வரைஞ்சுகிட்டு இருந்தார். அந்த படங்கள்ல தாடிவச்ச ஒருத்தர் என்னை வெறிச்சு பார்த்து சிரிச்சார். ‘உன்னை யாருமே புரிஞ்சுக்கலையா.. கவலையை விடு.. எல்லாத்தையும் என்கிட்டே விட்டுவிடு.. நான் பார்த்துக்கறேன்’னு பேசினார். பிரமிச்சுப் போயிட்டேன். ரமேஷிடம் ‘இவர் யாருப்பா’னு கேட்டேன் ‘அடப்பாவி இதுகூடவா தெரியாது.. இவர்தான்டா ராகவேந்திரர்’னு சொன்னார்!

பெற்றோர்…

எப்போ பார்த்தாலும் என்னோட அம்மா ராம்பாய் ‘வெயிலுல அலையாதே.. மறக்காம தலைக்கு எண்ணேய் தேய்ச்சு குளி.. நல்லா சாப்பிடு… வேலையில்லாட்டி பேசாம வீட்டுல படுத்து தூங்கு..’னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க! என் வாழ்க்கையோட எதிர்காலத்தைவிட என் உடம்புமேல ரொம்ப அக்கறை. அப்பா கோபக்காரர்.. படிக்கிறப்போ பிடிவாதம் பிடிப்பேன். அதனால் அப்பாவிடம் நிறைய அடிவாங்கிட்டு அப்படியே துங்கிடுவேன்.

மறுநாள் எதைக்கேட்டு அடம்பிடிச்சோம்… எதுக்காக உதை வாங்கினோம் என்பதே மறந்து போயிடும்.

குருநாதர்….

‘எம்.எஸ்.வி-யை சந்திக்கறதுக்கு முன்னாடி சோத்துக்கு வழியில்லை…. சந்திச்ச பின்னாடி சோறுதிங்க நேரமில்லை’னு எம்.எஸ்.விஸ்வநாதனை பத்தி பேசறபோது வாலி சார் அடிக்கடி சொல்லுவார். அப்படித்தான் நானும் கே.பி-சாரைபத்தி சொல்லுவேன். எனக்குள்ளே இருக்குற நடிகனை முதன்முதலா கண்டிபிடிச்ச கடவுள். அப்புறம்தான் உலகத்துக்கே நான் தெரிஞ்சேன். என்னை தெரியவச்சார்! ‘காமிரா முன்னாடி நடி… பின்னாடி நடிக்காதே..’னு சொன்னதை இன்னிக்கு வரைக்கும் கடைபிடிச்சுட்டு வர்றேன்.

கண்டக்டர்….

கர்நாடகா ட்ரான்ஸ்போர்ட்ல கண்டக்டரா வேலை பார்த்தப்போ ராஜ்பகதூர் நண்பனா கிடைச்சான். இப்போகூட ரெஸ்ட் கிடைச்சு பெங்களூரு போனால் வீட்டுலகூட அதிகம் இருக்க மாட்டேன். நண்பர்களோட பொழுது போக்குவேன். இப்போ பணம், பேர், புகழ் எல்லாம்  இருக்கு.. ஆனா அப்போ இருந்த சந்தோஷம், நிம்மதி இப்போ டெபனேட்டா இல்லை.

வீடு…

ராயப்பேட்டையில விட்டல் வீட்டு மாடியில் குடியிருந்தேன். அப்பவே அந்த ஹவுஸ்ஒனர் பாத்திமா அக்தர் நல்லா பழகுவாங்க. இப்போ நான் போயஸ் கார்டன்ல வசிக்கிற வீடு அந்தக்காலத்துல அவங்களுக்கு சொந்தமானது. நான்தான் விலைக்கு வாங்கினேன் இப்போ அதுக்கு பிருந்தாவன்னு பேர் வச்சிருக்கேன்.

மனைவி…

திருமணம் முடிஞ்ச பிறகுதான் ‘ஏண்டா இவ்வளவு லேட்டா கல்யாணம் செய்தோம்னு ஃபீல் செய்யுற அளவுக்கு லதா அன்பா இருந்தாங்க. என்னோட முன்கோபம், சினிமா தொழில்ல இருக்குற ப்ராப்ளம் எல்லாத்தையும் நல்லா உணர்ந்து உறுதுணையா இருக்குறாங்க. அம்மாவுக்கு என்னோட ஆரோக்கியம் முக்கியம்னா, லதாவுக்கு என்னோட எதிர்காலத்து மேல் ரொம்ப ரொம்ப அக்கறை.

நட்பு…

நான் கஷ்டபட்டபோதும் சரி… இப்போ வசதியா இருக்கும் போதும் சரி என்மேல ஒரே மாதிரி அன்பு செலுத்துற ராஜ்பகதூர் ஆச்சர்யமான நண்பன். அதுபோல இன்ஸ்ட்டியூட்ல படிச்சப்போ பழகிய நண்பர்கள் எல்லாருமே எனக்கு இப்பவும் நல்ல ப்ரெண்ட்ஸ்! சினிமாவுல, அரசியலுல எல்லாத்துலயும் நண்பர்கள் நிறையபேர் இருக்காங்க!

வாகனம்…

நான் பெங்களூர்ல கண்டக்டரா வேலை செஞ்ச பஸ் நம்பர் 10ஏ.  சென்னையில முதன்முதலா வாங்கின ஸ்கூட்டர் டிஎன்ஆர்- 4306, அப்புறம் பியட் கார் இப்போ இன்னோவா!

பட்டம்…

‘திரிசூலம்’ வெள்ளிவிழா பங்ஷனுக்கு மதுரைக்கு போயிருந்தேன். அப்போ எல்லாரும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போய் அவங்க அவங்க பேரைச்சொல்லி சாமிகிட்டே அர்ச்சனை செஞ்சாங்க. குருக்கள் என்னோட நடத்திரத்தை கேட்டார் ‘தெரியாது சாமீ..’னு சொன்னேன். இப்போதான் உண்மை தெரியுது மக்கள் கொடுத்து இருக்குற பட்டம்தான் (சூப்பர்ஸ்டார்) என்னோட உண்மையான  நட்சத்திரம்னு!

மேக்கப்….

‘அபூர்வராகங்கள்’ படத்துல முதன்முதலா மேக்கப் போட்ட சுந்தரமூர்த்திதான் ‘குசேலன்’வரை எனக்கு மேக்கப் போட்டவர்.

நடிப்பு…

படப்பிடிப்புக்கு போகும்போது முக்கியமான காட்சிகள் இருந்தால் என்னோட டயலாக்கை முதல்நாளே வாங்கிட்டுப் போய் வீட்டுல ரிகர்சல் செய்வேன். வசனத்தை ஷூட்டிங் ஸ்பாட்டுல மனப்பாடம் செய்யத் தெரியாம அப்படி செய்யறது இல்லை. மறுநாள் தேவையில்லாம நேரத்தையும், ஃபிலிமையும் வேஸ்ட் பண்ணாம நடிகனும்னு ஒரு அக்கறை அவ்வளவுதான்!

ரசிகர்….

‘அபூர்வ ராகங்கள் ‘ படத்தை சென்னை கிருஷ்ணவேணி தியேட்டர்ல முதன்முதலா பார்த்தேன். நான் நடிச்ச காட்சியை திரையில பார்த்ததும் சீட்டுல உட்கார்ந்து இருந்த ஒரு சிறுமி என்னை திரும்பி பார்த்தார். படம் முடிஞ்சி வெளியில வரும்போது என்கிட்டே ஓடிவந்த சிறுமி சினிமா டிக்கட் பின்னாடி கையெழுத்து கேட்டார்.. நான் போட்டேன். எனக்கு கிடைச்ச முதல் ரசிகை அந்த சிறுமிதான்.  அவர் எங்கேனு தேடிக்கிட்டே இருக்கேன். நான் போட்ட முதல் ஆட்டோகிராப் சினிமா டிக்கட் பின்னாலதான்!

-திருவாரூர் குணா

எறும்பின் தன்னம்பிக்கை!


தலைப்பைப் படித்ததும் இது சிறுவர்களுக்கான கதை என நினைத்து விடாதீர் கள். இது உங்களுக்கானது. முழுவதையும் படியுங்கள்.

இன்றைய மனிதர்களில் அதிகம் பேர் ஏதாவது ஒரு கவலையுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிறு தடையையும் பெரிதாக எண்ணி கவலைப் படுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் மேல் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததுதான்.

நமக்கு நண்பனும் நாமே; பகைவனும் நாமே என்று சொல்வதுண்டு.. அதாவது, எவன் ஒருவன் தன் பலவீனங்களை முறியடித்து வெற்றி பெறுகிறானோ, அவன் தனக்குத்தானே நண்பனாவான். யார் ஒருவன் தன் பலவீனங்களை வெற்றி பெற முடியாமல் தவிக்கிறானோ அவன் அவனுக்கு எதிரியாவான் என்று அர்த்தம்.

கவலைப்படுபவர்கள் இந்தியாவில் மட்டுமில்லை. உலகம் முழுவதுமே இருக்கிறார்கள். சமீபத்தில் கவலை குறித்து அமெரிக்காவில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவில் 40 சதவீதக் கவலைகள் எந்த அடிப்படைக் காரணமும் இல்லாத தேவையற்றவை. 30 சதவீதக் கவலைகள் கடந்த காலம் பற்றியவை. 12 சதவீதக் கவலைகள் பிறர் பற்றியது. 10 சதவீதக் கவலைகள் நம் நோய் நொடிகள் பற்றியவை. அது கூட கவலைப்படும் அளவுக்கு இல்லாமலும் இருக்கலாம். மீதம் உள்ள 8 சதவீதம் மட்டுமே உண்மையான கவலைகள் எனக் கண்டறியப்பட்டது.

பெரும்பாலான சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தால், ஒவ்வொரு தடையும் ஒவ்வொரு வெற்றியை மறைத்து வைத்திருக்கிறது என்பது புரியும். அது போன்றுதான் தோல்வியும். தோல்வி என்பது நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய அறிவிப்பு என்று சொல்லலாம். செல்வத்தை இழப்பது ஒன்றையும் இழப்பதாகாது. உடல் நலத்தை இழப்பது சிறிதளவு இழந்ததாகும். ஆனால் நம்பிக்கை இழப்பது எல்லாவற்றையும் இழந்ததற்குச் சமம் என்று சொல்வார்கள்.

தடைகளை வெல்வது எப்படி? இதை எறும்புகள் நமக்குக் கற்றுத் தருகின்றன. எறும்புகளை ஆராயும் உயிரியல் நிபுணர் ஒருவர் எறும்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தார். ஓர் எறும்பு தன் வாயில் நீளமான உணவுப் பொருளைச் சுமந்து கொண்டு சென்றது. தரை வழியே சென்று கொண்டிருந்த அந்த எறும்பு ஒரு வெடிப்பைப் பார்த்துவிட்டு திடீரென்று நின்றுவிட்டது. மேலே செல்ல முடியாமல் தவித்தது. சிறிது நேரம் கழித்து, தான் சுமந்து வந்த இரையை வெடிப்பின் மேல் வைத்து அதன் மீது ஊர்ந்து சென்று வெடிப்பைக் கடந்தது. பின்பு அந்த இரையைக் கவ்விக் கொண்டு சென்றது. எறும்பின் அறிவு வியப்பை அளிப்பதாக உள்ளது என எழுதியிருக்கிறார் அந்த ஆராய்ச்சியாளர்.

துன்பம் ஏற்பட்டால், அத்துன்பத்தையே பாலமாக வைத்து முன்னேற வேண் டும் என்பதை நாம் எறும்பிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு மிகச் சிறிய உயிரியான எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தால் கூடப் போதும் எந்தத் தடையையும் வெல்ல முடியும். கவலையும் காணாமல் போய்விடும்.

 

 

சித்தர்கள் வரலாறு -I [கருவூரார்] / Stories of Siddhas -I [ karuvoorar ]


 

வேறு கருவில் ஊராத கருவூரார்

சோழ நாட்டின் கருவூரில் பிறந்த கருவூர்ச்சித்தர், துள்ளி விளையாடும் பருவத்திலேயே ஆர்வத்துடன் ஞான நூல்களைக் கற்றார்.

கருவூராரின் பெற்றோர் ஊர் ஊராகச் சென்று, ஆங்காங்குள்ள கோவில்களில் விக்ரகங்கள் செய்து கொண்டு வாழ்ந்தார்கள்.

ஒரு சமயம் போகர் திருவாவடுதுறைக்கு வந்தார். அதையறிந்த கருவூரார் அவரைச் சென்று வணங்கி தம்மை அவருடைய சீடராக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார்.

“கருவூராரே! உன் குல தெய்வம் அம்பாள், தினந்தோறும் அவளை வழிபடு, அவள் உனக்கு வழிகாட்டுவாள்” என்று கூறி வழிபாட்டு நெறிகளை கருவூராருக்கு உபதேசித்தார். போகர் உபதேசப்படி, கருவூரார், உள்ளம் உருகி அம்மனை வழிபட ஆரம்பித்தார். போகரின் வாக்கு பலித்தது. கருவூரார் சித்துக்கள் புரியும் ஞானவானாக உயர்ந்தார்.

கருவூரார், சிவாலயங்களில் தங்கத்தால் சிவலிங்கங்களை உண்டாக்கி வைத்தார். சித்தரின் இரசவாத வித்தையின் மூலம் உருவான அச்சிவலிங்கங்கள் ஒருமுறை பார்த்தால் செம்பு போலவும், மற்றொரு முறைப் பார்த்தால் பொன் போலவும் தோன்றும். கருவூரார் காசிக்குச் சென்று விசுவநாதர் ஆலயத்திலும் தாமிரத்தில் வேதை செய்து தங்கமயமான லிங்கத்தை உருவாக்கி வைத்தார்.

போகர் தமிழ் நாட்டில் வசித்த காலத்தில் கருவூர் சித்தரும், திருமளிகைத் தேவரும் அவரின் பிரதான சீடர்களாக திகழ்ந்தனர்.

சோழ மன்னன் இரணிய வர்மன் தீர்த்த யாத்திரை புறப்பட்டு பல் புண்ணிய தலங்களை தரிசித்துவிடு தில்லையை அடைந்தார். சிற்றம்பல திருக்குளமான சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடும்போது தண்ணீருக்குள் ஓங்கார நாதம் ஒலித்தது. அரசருக்கு ஆச்சரியம் தாளவில்லை. தண்ணீரை விட்டு வெளியே எழுந்தவுடன் அந்நாதம் கேட்கவில்லை. மீண்டும் நீருக்குள் மூழ்கினார், ஓங்கார ஒலி தெளிவாகக் கேட்டது.

என்ன இது அதிசயம்? மறுபடியும் மூழ்கினார். கண்களைத் திறந்தார். அங்கு ஆடல் வல்லாரின் அற்புத நடனமும் கூடவே ஓங்கார ஒலி; அரசர் வியப்பில் ஆழ்ந்து போய் மீண்டும் மீண்டும் நீரினுள் மூழ்கி அந்நடனத்தையும் ஓங்கார ஓசையையும் கேட்டார்.

தாம் கண்ட காட்சியை ஓவியமாக வரைந்தார். தான் அனுபவித்த இந்த அற்புத இன்பத்தை உலகிலுள்ள அனைவரும் கண்டு அனுபவிக்க வழியை யோசித்தார். இறுதியில், தான் கண்ட வடிவத்தை மிகவும் தூய்மையான சொக்கத் தங்கத்தில் விக்ரகமாகச் செய்து பொன்னம்பலத்தில் எல்லோரும் தரிசனம் செய்யும்படி அமைக்க வேண்டுமென முடிவு செய்தார்.

“கலப்படமில்லாத சொக்கத்தங்கத்தில் உருவாக்க வேண்டும். செம்போ அல்லது வேறு எந்த உலோகமோ கடுகளவும் சேர்க்காமல் நாற்பத்தி எட்டு நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டுமென்று சிற்பிகளிடம் கூறினார்.

ஆனால் சிற்பிகள் என்ன முயன்றும் விக்கிரகத்தை முடிக்க முடியவில்லை. ஏதேனும் ஒரு வகையில் விக்கிரகத்தில் குறைவு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.

மன்னர் கொடுத்த கெடுவில் நாற்பத்தேழு நாட்கள் பலனில்லாமல் போய்விட்டன.

தில்லையில் நடராசர் திருவுருவம் அமைக்கச் சிற்பிகள் வருத்தப்படுகிறார்கள் என்ற விவரத்தை அறிந்த போகர், தமது பிரதான சீடரான கருவூராரை அழைத்து, “கருவூரா! அந்த விக்கிரகம் செய்ய வேண்டிய வழிமுறைகளை நான் உனக்கு சொல்கிறேன். நீ போய் செய்து முடி” என்று சொல்லி கருவூராருக்கு வழிமுறைகளை அறிவித்து வழியனுப்பினார்.

நாற்பத்தெட்டாவது நாள் சிற்பிகளுக்கு மன்னர் கொடுத்த கடைசி நாள். சிற்பிகளெல்லோரும் சொல்லவியலாத துன்பத்தில் இருந்தனர்.

மரண பயத்தில் தவித்துக் கொண்டிருந்தவர்கள் முன்னிலையில் கருவூரார் போய் நின்றார்.

“கவலைப்படாதீர்கள், மன்னரின் விருப்பப்படியே ஆடல் வல்லாரின் விக்கிரகத்தை நான் செய்து தருகிறேன்” என்று சிற்பிகளுக்கு ஆறுதல் கூறினார். சிற்பிகளோ “தேர்ந்த சிற்பிகளான எங்களாலேயே முடியாத போது உம்மால் எப்படி முடியும்?” என்றார்கள். “என்னால் முடியும். அதுவும் இன்னும் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே”, என்றார் கருவூரார்.

விக்கிரகம் செய்வதற்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து தாழிட்டுக் கொண்டார்.


சிற்பிகள் நம்பமுடியாமல் வெளியே காத்திருந்தனர். ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்குப் பிறகு கதவு திறந்து கருவூரார் வெளியே வந்து, “போய்ப் பாருங்கள், உங்கள் எண்ணப்படியே விக்கிரகம் முடிந்து விட்டது” என்று சொன்னார்.

நம்ப முடியாத ஆச்சரியத்தில் சிற்பிகள் உள்ளே நுழைந்தனர். அங்கு கருவூராரால் வடிவமைக்கப்பட்ட அம்பலக் கூத்தனின் அழகு திருமேனி உருவம் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வெளியே வந்த சிற்பிகள் கருவூராரை வணங்கினர்.

மறுநாள் சூரியோதயத்திற்கு முன்னரே இரணிய வர்மன் நீராடி திருநீற்றுக்கோலத்துடன் சிற்பிகள் இருந்த இடத்திற்கு வந்தார்.

அங்கு இருந்த நடராசர் சிலையின் அற்புத அழகில் மயங்கினார். சிலையின் ஒளியில் அவர் கண் கூசியது. “இறைவா! நீ இங்கு எழுந்தருளிய கோலம் தான் என்னே!” என்று வியந்தார். அங்கம் அங்கமாகத் தங்கச் சிலையை பார்த்து வியந்தார். தான் வரைந்த ஓவியத்தில் இல்லாத அருள்சக்தி விக்கிரகத்தில் இருப்பதை உணர முடிந்தது. அவர் முகத்தில் மகிழ்ச்சி அதிகரித்தது. சிற்பிகள் பக்கம் திரும்பிய மன்னர், ‘அபாரம்! அற்புதமாகச் செய்து விட்டீர்கள் உங்களுக்கு தக்க சன்மானம் கொடுக்கப் போகிறேன்” என்றார். அப்போது மந்திரி, “மன்னா! சிலையிலிருக்கும் தங்கத்தை சோதித்த பின்னர் இவர்களுக்கு வெகுமதி கொடுக்கலாமே!” என்றார். அதைக் கேட்ட மன்னர், “சிற்பிகளே! விக்கிரகம் செய்யும் போது தங்கத்துகள்கள் சிந்தியிருக்குமே அந்தத் துகள்களைக் கொண்டு வாருங்கள்” என்றார்.

தங்கத்துகள்களை சிற்பிகள் கொண்டு வந்தார்கள். சோதனை செய்த மன்னரின் முகம் கடுமையாக மாறியது.

“சுத்தமான தங்கத்தில் செய்ய வேண்டும் எனச் சொல்லித்தானே உங்களை நியமித்தேன். சிலையில் சிறிது செம்பைக் கலந்து என்னிடம் நம்பிக்கை மோசடி செய்யலாமா?” என்று கடுமையாகக் கேட்டார்.

சிற்பிகள் பயந்து நடுங்கினர். “அரசே, நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அந்தச் சிலையை எங்களால் செய்ய இயலவில்லை. அம்பலவர் அடியார் ஒருவர் வந்து இந்தச் சிலையை செய்தளித்தார்” என்றார்கள்.

மன்னர் திகைத்து விட்டார்.

“அடியார் செய்தாரா? அவரை இழுத்து வாருங்கள்” என்று கட்டளை பிறப்பித்தார் மன்னர்.

உடனே பணியாட்கள் கருவூரார் இருக்கும் இடம் சென்று அவரை அழைத்து வந்தார்கள். கருவூராரை மேலும் கீழுமாகப் பார்த்த மன்னர், “இவரைச் சிறையில் தள்ளுங்கள். யோசித்து, நாளை தண்டனை வழங்குகிறேன்!” என்று சொல்லி சிலையுடன் அரண்மனையை அடைந்தார்.

அங்கு விக்கிரகத்தை ஒரு பீடத்தில் வைத்து அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார், மன்னர் கண்களில் இருந்து கண்ணீர் ததும்பிக் கொண்டிருந்தது.

திடீரென்று அவரெதிரே போகர் தோன்றினார். போகரின் பின்னால் தலைகளில் தங்க மூட்டைகளுடன் அவருடைய ஐந்து சீடர்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஒரு சீடரிடம் தராசு ஒன்றும் காணப்பட்டது. திடீரென்று அவர்களைப் பார்த்ததுமே மன்னருக்கு ஒன்றுமே தோன்றவில்லை. எழுந்து நின்று கைகளைக் குவித்தார்.

“மன்னா! நீ சிறைச்சாலையில் அடைத்து வைத்திருக்கிறாயே, அவன் என் மாணவன் இனி எந்தக் கருவிலும் ஊர்தல் செய்யாத தகுதி கொண்ட அவனைச் சிறையில் அடைத்து விட்டாய், இதுதானா உன் ஆட்சி முறை?” எனக்கேட்டார் போகர்.

அரசர், “சுத்தத் தங்கத்தில் செய்ய சொன்ன சிலையை செம்பு கலந்து செய்தது மாபெரும் தவறு அல்லவா? அதற்கேற்ற தண்டனைதான் அது” என்றார்.

“சுத்தத் தங்கத்தில் விக்கிரகம் செய்ய முடியாதே! அதனால் தான் செம்பைக் கொஞ்சம் கலக்கச் சொன்னேன். அப்படி செய்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு கேள். தூய்மையான சொக்க தங்கத்தில் வடிவம் ச்ய்து வைத்தால், அதிலிருந்து கிளம்பும் ஒளி, பார்ப்பவர்களின் கண்களை நாளாக நாளாக குருடாக்கி விடும். இந்த அறிவியல் உண்மை உனக்குத் தெரியாது.

அதனால்தான் என் மாணவன் கருவூரான் சிறிது செம்புடன் பலவிதமான மூலிகைச் சாறுகளையும் சேர்த்து விக்கிரகமாகச் செய்திருக்கிறான். சரி போனது போகட்டும் இந்தா நீ தந்த அதே சுத்த மாற்று தங்கம்,” என்றதோடு தராசில் சிலையை வைத்து இன்னோரு தட்டில் தங்கத்தைக் கொட்ட சீடர்களிடம் கூறினார்.

போகர், “அரசே! உன் தங்கத்தை நீ எடுத்துக் கொள்” என்று கூறிவிட்டு சிலையை கையில் எடுத்துக் கொண்டு கிளம்பத் தொடங்கினார்.

மன்னர் திடுக்கிட்டு போகரின் காலில் வீழ்ந்து வணங்கி தன்னை மன்னிக்குமாறு வேண்டினார்.

எழுந்திருங்கள் அரசே நடராசப் பெருமானை உமக்கே தருகிறேன். என் சீடனை எனக்குத் திருப்பிக் கொடு என்று கேட்டார் போகர்.

அதற்கு அரசர் “தாங்களே கருவூராரை சிறையிலிருந்து வெளியில் வரும்படி அழையுங்கள்” என்றார். அவர் அழைக்கவும் சிறையிலிருந்து வெளியே வந்தார் கருவூரார்.

அத்துடன் கோவில் அமையவேண்டிய முறை, எந்தெந்த வடிவங்களை எங்கெங்கு எப்படி வைக்க வேண்டும். மூலவரை எப்படி பிரதிட்டை செய்து பூசை செய்ய வேண்டும் என்று தெரிவித்துவிட்டு கருவூரார் அங்கிருந்து சென்றார்.

திருவிடை மருதூர் என்னும் தலத்தை அடைந்து இறைவனை நோக்கி குரல் கொடுத்த போது இறைவன் தலையைச் சிறிது சாய்த்து கருவூரார் குரலைக் கேட்டு பதில் கொடுத்தார். திருவிடை மருதூரில் இன்றும் சிறிது தலை சாய்ந்த நிலையிலேயே இறைவன் திருவடிவம் காணப்படுகிறது.

தஞ்சையில் கோவில் கும்பாபிசேகம் தடைபட்டு நிற்பதைக் கண்ட கருவூரார் உடனே கருவறையில் இருந்த சிவலிங்கத்தை நோக்கிச் சென்றார். எளிதாக அட்ட பந்தனம் செய்து சிவலிங்கப் பிரதிட்டையும் கும்பாவிசேகமும் செய்து வைத்தார்.

மன்னன் கொண்டாடினான். மக்கள் மகிழ்ந்தார். இறைவனும் மனங்களித்தார்.

தஞ்சையிலிருந்து திருவரங்கம் சென்ற கருவூர் சித்தரை, அபரங்சி என்ற தாசி சந்தித்தாள். அவரை முறைப்படி வணங்கி, ஞான சாதனையில் தனக்குள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டினாள். அவள் ஆர்வத்தைப் பாராட்டி தீர்த்து வைத்தார்.

மறுநாள் அரங்கரிடம் சென்று அபரஞ்சிக்கு பரிசளிக்க நவரத்ன மாலையொன்றை வாங்கி அதை அவளிடம் தந்தார். கருவூரார் விடைபெறுகையில் அபரஞ்சி வருந்தினாள். “நீ எப்போது நினைத்தாலும் நான் வருவேன்” என்று கூறி தன் யாத்திரையைத் தொடங்கினார்.

மறுநாள் காலை திருவரங்கன் மேனியில் இருந்த நவரத்ன மாலை காணாமல் போன செய்தி தெரிந்தது. அதே சமயம் திருவரங்கக் கோவிலுக்குள் வந்த அபரஞ்சியின் கழுத்தில் அம்மாலை இருந்ததைக் கண்டு அனைவரும் திகைத்தனர்.

பஞ்சாயத்து தொடங்கியது. “பெருமானின் நகை உன்னிடம் எப்படி வந்தது” என்று அனைவரும் கேட்டனர். அபரஞ்சியும் “இந்த பள்ளி கொண்ட பெருமானின் சார்பாக கருவூரார் கொடுத்த பரிசு இது” என்று அமைதியாக பதிலளித்தாள். கோயிலதிகாரி திடுக்கிட்டார். “கருவூரார் எங்கே?” என்று கேட்டார்.

அபரஞ்சிதா மனதார கருவூராரை நினைத்தவுடன் அவர் தோன்றினார். “இந்த பிரச்சினைக்கு அரங்கனே பதில் சொல்வான்” என்றார். அது சமயம் எல்லோரும் கேட்கும் வண்ணம், “நீங்கள் எல்லோரும் எனக்கு அலங்காரம் செய்து பார்க்க நினைக்கிறீர்கள். நானோ என் அடியார்களை அலங்காரம் செய்து பார்க்க நினைத்தேன். நான் தான் அபரஞ்சிதாவுக்கு நவரத்ன மாலையை கருவூரார் மூலம் அளித்தேன்”, என்று அரங்கர் அசரீரி மூலம் சொன்னார்.

உண்மையை அறிந்த ஊரார்கள் கருவூராரிடமும் அபரஞ்சியிடமும் மன்னிப்பு கேட்டார்கள்.

அரசரிடமும் ஊராரிடமும் செல்வாக்கு அதிகரிப்பதைக் கண்ட அவ்வூர் அந்தணர்கள் பொறாமை கொண்டனர். அவரை வம்பில் இழுத்துவிட நினைத்து மதுவையும், மாமிசத்தையும் அவர் இல்லத்தில் மறைத்து வைத்தனர். அரசரிடம் சென்று கருவூராரின் இல்லத்தில் மது மாமிசம் இருப்பதாக கூறினர்.

அரசரின் ஆணைப்படி கருவூராரின் வீடு சோதனைக்குள்ளானது. ஆயினும் அங்கே பூசைக்கு உண்டான பொருட்களும் யாகத்திற்கு தேவையான பொருட்களும் இருப்பதைக் கண்ட மன்னர் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கோரினார். தன்னை முட்டாளாக்கிய வேதியர்கள் மீது கடும் கோபம் கொண்டான். கருவூரார் அவரைச் சமாதானப்படுத்தினார்.

அவமானம் அடைந்த வேதியர்களுக்கு கருவூராரின் மீது கடும் சினம் ஏற்பட்டது. வேதியர்கள் ஒன்று கூடி அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் துரத்தினர். வேதியர்கள் நோக்கத்தினைப் புரிந்து கொண்ட கருவூரார் அவர்களுக்கு பயந்து ஓடுவதைப் போன்று திருஆனிலையப்பர் கோவிலுக்குள் ஓடினார்.

கோவிலுக்குள் ஓடிய கருவூரார், “ ஆனிலையப்பா, பசுபதீசுவரா!” என்று கூறியழைத்து கருவறையிலிருந்த சிவலிங்கத்தைத் தழுவினார். இனி எந்தக் கருவிலும் ஊறுதல் இல்லாத கருவூரார் இறைவனுடன் இரண்டறக் கலந்து மறைந்தார்.

கருவூராரைத் துரத்தி வந்தவர்கள் இந்த தெய்வீகக் காட்சியைக் கண்டார்கள். தங்கள் தவறுக்கு வருந்தி பரிகாரமாக ஆனிலையப்பர் கோவிலில் ஒரு தனி சந்நிதி அமைத்து அதில் கருவூராரின் வடிவத்தினை அமைத்து வழிபட்டனர். தஞ்சை பெரிய கோவிலிலும் அவரது சிலை பிரதிட்டை செய்யப்பட்டது.

 

 

 

 

விரதமே மகத்தான மருத்துவம்!


இயற்கை மீதான பேரன்பும் உடல் மீதான அக்கறையும் எந்த வயதிலும் ஒருவரை இளமை குறையாமல் வைத்திருக்கும் என்பதற்குச் சாலச் சிறந்த உதாரணம் நம்மாழ்வார். சிறிய எழுத்துக்களையும் கண்ணாடி இல்லாமல் துல்லியமாகப் படிப்பது, சோர்வே இல்லாமல் பல கிலோ மீட்டர் தூரம் நடப்பது, தோட்ட வேலை, எழுத்துப் பணி, மேடைப் பேச்சு என ஒரு நாளைக்கு 16 மணி நேரம் பம்பரமாகச் சுழல்கிறது நம்மாழ்வாருக்கு. ”75 வயதிலும் எப்படி இப்படி ஒரு சுறுசுறுப்பு?” எனக் கேட்டால், சிறு குழந்தையாகச் சிரிக்கிறார் நம்மாழ்வார்.

”எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாலேயே, ‘உணவே மருந்து; மருந்தே உணவு’ன்னு திருமூலர் சொல்லிட்டுப் போயிட்டார். இந்த அற்புதமான வாக்கை ஆராதிக்கத் தவறியவர்கள்தான் எண் சாண் உடம்பில் எண்ண முடியாத வியாதிகளோடு அலையறாங்க. வாழ்க்கையில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று நோயே வராமல் வாழ்வது. இரண்டாவது, நோய் வந்த பின் வருந்தியபடியே வாழ்வது. முதல் வகையில் இணைந்துவிட்டால், நமக்கு இன்னல்கள் இருக்காது.

‘மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்’ என்ற குறளிலேயே நோய் அண்டாமல் வாழ்வதற்கான வழி சொல்லப்பட்டு இருக்கிறது. உண்ட உணவு சீரணமாகிவிட்டதை அறிந்து, அதன் பிறகு உண்டால் அந்த உடம்புக்கு மருந்து என்ற ஒன்றே தேவை இல்லை எனச் சொல்லி இருக்கிறார் வள்ளுவர்.

எதை, எப்போது, எப்படி உண்ண வேண்டும் என்பதே நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. நாம் உண்ணும்போது முதலில் உணவை விழுங்குறோம். ஆனால், அப்படி விழுங்கக்கூடாது. பற்களால் நன்றாக அரைத்து, கூழாக்கி உமிழ்நீரோடு சேர்த்து உள்ளே தள்ளவேண்டும். இதைத்தான், ‘நொறுங்கத் தின்றால் நோய் தீரும்!’ எனப் பழமொழியாகச் சொன்னார்கள். அளவு கடந்து உணவு உண்பவர்கள் நோய்களை எதிர்கொள்ளவேண்டி இருக்கும். நாம் உண்ணும் உணவுக் கழிவுகள் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் கொஞ்சம் கொஞ்சமாகத் தேங்குகிறது. இதன் அளவு அதிகரிக்கும்போது நோய் உண்டாகிறது. சரி, அதை எப்படிக் களைவது? இதற்கான சுலபமான வழி, உண்ணாநோன்பு. இதைத்தான் ‘விரதம்’ என்ற பெயரில் கடைபிடித்தார்கள் நமது முன்னோர்கள். ‘நோயிலே படுப்பதென்ன கண்ண பரமாத்மா, நோன்பிலே உயிர்ப்பதென்ன கண்ண பரமாத்மா’ எனப் பாடினார்களே… அந்த நோன்புதான் உண்ணாநோன்பு. இறக்கும் தருவாயில் இருப்பவனைக்கூட உயிர்த்தெழுச் செய்யும் சக்தி உண்ணா நோன்புக்கு இருக்கிறது. இதைத்தான் ஆங்கிலத்தில் ‘தெரப்பூட்டிக் பாஸ்ட்டிங்’ (Theraupeutic fasting) என்று சொல்கிறார்கள். இன்றைக்கு சர்வதேச அளவில் இந்தச் சிகிச்சை பிரபலமாகி வருகிறது. உண்ணாநோன்பு இருக்கும்போது நம் உடலுக்குள் இருக்கும் தேவையில்லாத கழிவுகள் தன்னாலே வெளியேறி விடுகின்றன. உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ள நாம் அனுமதிக்க வேண்டும்.

அடுத்ததாக, எதைச் சாப்பிட வேண்டும் என்பது மிகவும் முக்கியம். நம் உணவில் காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். ‘வெந்ததைக் குறைத்தால் வேதனையை குறைக்கலாம்’ என்பார்கள். அதாவது வேகவைத்த உணவைக் குறைத்துக்கொண்டு பச்சைக் காய்கறிகள், பழங்களை உண்ண வேண்டும். நான் 35 வயதில் கண்ணாடி அணிந்தேன். 60 வயதில் அதை அகற்றிவிட்டேன். இப்போது கண்ணாடியைப் பயன்படுத்துவதே இல்லை. பொடி எழுத்துக்களைக்கூட என்னால் துல்லியமாக வாசிக்க முடியும். இதற்குக் காரணம் எனது உணவுப் பழக்கங்கள்தான்!” – விழி விரியவைக்கும் அளவுக்கு ஆச்சரியமாகப் பேசுகிறார் நம்மாழ்வார். அடுத்து, மூலிகைகளை நோக்கி நீள்கிறது பேச்சு.

”இயற்கை நமக்குக் கொடுத்த அருட்கொடை மூலிகைகள். நாம் பயிர் செய்யாமலேயே நமக்கான உணவாக சில மூலிகைகளை இயற்கை உற்பத்தி செய்கிறது. உதாரணமாக, பிரண்டை. இதைத் துவையல் செய்து சாதத்தில் குழம்புக்குப் பதிலாக பிசைந்து உண்ணலாம். தூதுவளை, மொசுமொசுக்கை இலைகளைச் சேர்த்து ரசம் வைத்து உண்டால் நாள்பட்ட சளி தீரும். வாய்ப்புண்ணை ஆற்ற மணத்தக்காளி, வெட்டுப் புண்களை ஆற்ற வெட்டுக்காயப் பச்சிலை, அனைத்துக் கும் சிறந்த ஆவாரை, துளசி என மூலிகைகளின் அதிசய ஆற்றல் கொஞ்சநஞ்சம் அல்ல. நம்மைச் சுற்றி வளர்ந்துகிடக்கும் எண்ணில்லா மூலிகைகளை நாம் சரியாகப் பயன்படுத்தினாலே பாதி நோய்கள் காணாமல் போய்விடும்!” எனச் சொல்லும் நம்மாழ்வார், உடலின் மகத்துவத்தையும், யோகாவின் சிறப்பையும் சொல்லத் தொடங்கினார்.

”இயற்கை ஒருபோதும் தவறு செய்வதில்லை. உடல் ஒருபோதும் தன் கடமையை நிறுத்துவதில்லை. பசி வந்தால் உணவு, தாகம் எடுத்தால் தண்ணீர், சோர்வு வந்தால் உறக்கம் என உடல் சரியான சமிக்ஞைகளை நமக்கு கொடுத்தவண்ணம் இருக்கிறது. அதன்படி உணவு, உறக்கத்தை நாம் கடைப்பிடித்தாலே உடலுக்கு எந்தவிதமான சிக்கலும் வராது. பலர் உடம்பு வலிக்காக மாத்திரை, மருந்துகளை உட்கொள்கிறார்கள். வலி என்பது உடம்பு தன் உள்ளே இருக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் முயற்சி. அதைத் தடுக்கக்கூடாது.

50 வயது வரை உடம்புதான் உன்னதம் என நினைக்கும் மனது, அதற்குப் பிறகு ஆன்மாவை ஆராதிக்கிறது. ஆன்மா இந்த உடம்புக்குள்ளேதானே இருக்கிறது! அதனால், உடலைப் பராமரிப்பதும் அவசியம். இது இரண்டையும் ஒரே நேரத்தில் பராமரிக்க உதவுவதுதான் யோகா. நான் நீண்ட காலமாக யோகா செய்து வந்தாலும், ‘ஈஷா’ பயிற்சியில்தான் அதை முறைப்படுத்தினேன். தினமும் காலையில் நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, யோகா செய்கிறேன்.

ஈஷா யோகா பயிற்சியின்போது நடந்த நேர்காணலில், ‘யோகா செய்வதன் மூலம் நோய்கள் குணமாகும் என்றால், எதற்காக இத்தனை மருத்துவர்களும், மருத்துவமனைகளும் இருக்கின்றன?’ என சத்குருவிடம் கேட்டேன். ‘நாட்டில் தினமும் ஆயிரக் கணக்கில் விபத்துகள் நடக்கின்றன. விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா சொல்லிக் கொடுக்க முடியாது அல்லவா? அவர்களுக்குத் தேவை, அவசர சிகிச்சை. அதற்காகத் தான் மருத்துவர்களும், மருத்துவமனைகளும்!’ என்று அவர் அமைதியாகச் சொன்னார்.

அவர் சொன்னது உண்மைதான். ஆங்கில மருத்துவத்தை அவசரத்தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாத்திரை, மருந்துகளைத் தொடர்ச்சியாக உட்கொள்ளும்போது, அதுவே உடம்பில் பல உபத்திரவங்களை உண்டாக்குகிறது.

மொத்தத்தில், சரியான பழக்க வழக்கங்களும், உடலைப் பேணும் உணவு முறையும், ஆரோக்கியமான சுற்றுச்சூழலும் இருந்தாலே நோய்க்கு ‘நோ என்ட்ரி’ போட்டுவிடலாம்!” எனச் சொல்லும் நம்மாழ்வார் இறுதியாக இப்படிச் சொல்கிறார் வாழ்வியல் மந்திரத்தை.

‘கணியன் பூங்குன்றனார் சொன்ன ‘தீதும், நன்றும் பிறர் தர வாரா’ என்கிற வரி நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஒருசேர வழிகாட்டக்கூடியது. அந்த வரிகளை மனதில் ஏற்று இயற்கையை வணங்கி, உடலை ஆராதிக்கக் கற்றுக் கொண்டால் வாழ்வின் சிறப்புக்குக் குறைவே இருக்காது!”.

– நன்றி சக்தி விகடன்

 

 

 

 

ஈமு கோழி வளர்ப்பு : கவர்ச்சிகரமான மோசடி!


 

ஈமு கோழி வளர்ப்பு : கவர்ச்சிகரமான மோசடி!

ஈமு கோழி வளர்ப்பு : கவர்ச்சிகரமான மோசடி!</p>
<p>உண்மை நிலவரம் என்னவென்றால், ஈமுவின் தாயகமான ஆஸ்திரேலியாவில் 1987ஆம் ஆண்டில்தான் வணிகரீதியான ஈமு பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அங்குள்ள ஈமு பண்ணைகள் ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான கோழிகள் இருந்தன. இப்படிப் பல ஆண்டுகளாக இத்தொழில் இருக்கும் அந்நாட்டில் ஈமு கோழியின் இறைச்சிக்கான நவீன தொழிற்சாலைகளோ, பதப்படுத்தும் நிறுவனங்களோ இல்லை. ஆஸ்திரேலியாவின் உள்ளூர்ச் சந்தையிலே மதிப்பிழந்த பொருளாக ஈமு மாறிவிட்டதால், 1996இல் ஆஸ்திரேலியப் பண்ணைகளில் 2 லட்சமாக இருந்த ஈமு கோழிகளின் எண்ணிக்கை 2005இல் 18,600 ஆகக் குறைந்துவிட்டது. ஆனால், இங்குள்ள நிறுவனங்களோ உள்ளூர் சந்தை விரிவடைகிறது; ஏற்றுமதி செய்கிறோம் எனக் கூசாமல் புளுகி, விவசாயிகளை ஏய்த்து வருகின்றன.ஐந்தாண்டுகளுக்கு முன் 3 மாத வயது கொண்ட ஒரு ஜோடி குஞ்சை 15,000 முதல் 20,000 ரூபாய் வரை இந்நிறுவனங்கள் விவசாயிகளிடம் விற்றன. குஞ்சுகள் வளர்ச்சி அடைந்து முட்டை இடும்பொழுது முட்டையை ரூ.1500 முதல் 2000 வரை கொள்முதல் செய்ய உத்திரவாதம் கொடுத்தன. ஆனால் இப்போது ரூ. 1000க்குக்கூட முட்டையை வாங்க மறுக்கின்றன. மேலும், கொள்முதல் என்பதே அரிதாகத்தான் நடக்கிறது. இந்நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த முட்டையிலிருந்து குஞ்சு உற்பத்தி செய்து மீண்டும் புதிதாக வரும் விவசாயிகளிடம் விற்கின்றன. முட்டை கொள்முதல் குஞ்சு உற்பத்தி விநியோகம் முட்டை கொள்முதல் என்ற சுழற்சிதான் தொடர்ந்து நடந்தேறி வருகிறது. ஈமு கறி ஏற்றுமதி என்பது நடப்பதில்லை. ஈமு கோழித் தீவன நிறுவனங்களோ, கறியை வெட்டிப் பதப்படுத்தும் நிறுவனங்களோ, தோலை உரித்துப் பதப்படுத்தும் நிறுவனங்களோ, கறியிலிருந்து எண்ணெய் எடுக்கும் நிறுவனங்களோ இந்தியாவில் இல்லை. கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் ஈமு கோழியின் உடற்கூற்றியல், மருத்துவம், நோய்கள் பற்றிய எந்தப் பாடமும் இல்லை.” width=”320″ height=”330″ /></span></div>
</div>
<p> </p>
<h3 style=

உண்மை நிலவரம் என்னவென்றால், ஈமுவின் தாயகமான ஆஸ்திரேலியாவில் 1987ஆம் ஆண்டில்தான் வணிகரீதியான ஈமு பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அங்குள்ள ஈமு பண்ணைகள் ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான கோழிகள் இருந்தன. இப்படிப் பல ஆண்டுகளாக இத்தொழில் இருக்கும் அந்நாட்டில் ஈமு கோழியின் இறைச்சிக்கான நவீன தொழிற்சாலைகளோ, பதப்படுத்தும் நிறுவனங்களோ இல்லை. ஆஸ்திரேலியாவின் உள்ளூர்ச் சந்தையிலே மதிப்பிழந்த பொருளாக ஈமு மாறிவிட்டதால், 1996இல் ஆஸ்திரேலியப் பண்ணைகளில் 2 லட்சமாக இருந்த ஈமு கோழிகளின் எண்ணிக்கை 2005இல் 18,600 ஆகக் குறைந்துவிட்டது. ஆனால், இங்குள்ள நிறுவனங்களோ உள்ளூர் சந்தை விரிவடைகிறது; ஏற்றுமதி செய்கிறோம் எனக் கூசாமல் புளுகி, விவசாயிகளை ஏய்த்து வருகின்றன.

ஐந்தாண்டுகளுக்கு முன் 3 மாத வயது கொண்ட ஒரு ஜோடி குஞ்சை 15,000 முதல் 20,000 ரூபாய் வரை இந்நிறுவனங்கள் விவசாயிகளிடம் விற்றன. குஞ்சுகள் வளர்ச்சி அடைந்து முட்டை இடும்பொழுது முட்டையை ரூ.1500 முதல் 2000 வரை கொள்முதல் செய்ய உத்திரவாதம் கொடுத்தன. ஆனால் இப்போது ரூ. 1000க்குக்கூட முட்டையை வாங்க மறுக்கின்றன. மேலும், கொள்முதல் என்பதே அரிதாகத்தான் நடக்கிறது. இந்நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த முட்டையிலிருந்து குஞ்சு உற்பத்தி செய்து மீண்டும் புதிதாக வரும் விவசாயிகளிடம் விற்கின்றன. முட்டை கொள்முதல் குஞ்சு உற்பத்தி விநியோகம் முட்டை கொள்முதல் என்ற சுழற்சிதான் தொடர்ந்து நடந்தேறி வருகிறது. ஈமு கறி ஏற்றுமதி என்பது நடப்பதில்லை. ஈமு கோழித் தீவன நிறுவனங்களோ, கறியை வெட்டிப் பதப்படுத்தும் நிறுவனங்களோ, தோலை உரித்துப் பதப்படுத்தும் நிறுவனங்களோ, கறியிலிருந்து எண்ணெய் எடுக்கும் நிறுவனங்களோ இந்தியாவில் இல்லை. கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் ஈமு கோழியின் உடற்கூற்றியல், மருத்துவம், நோய்கள் பற்றிய எந்தப் பாடமும் இல்லை.

 

 

 

 

தமிழன் என்று சொல்லுடா,தலை நிமிர்ந்து நில்லடா..


நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன்,

என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான் ” நாவலன் தீவு ” என்று அழைக்கப்பட்ட ” குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!.

இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் ” குமரிக்கண்டம் “.ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலை நாடு,ஏழுபின்பலை நாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர் ” இறையனார் அகப்பொருள் ” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள ” தென் மதுரையில் ” கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, ” பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம் ” ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .

இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம் ” கபாடபுரம் ” நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன் ” அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம் ” ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில் ” தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய ” மதுரையில் ” கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் ” அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள் ” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்று தேடல் தொடரும்………!!

இருட்டில் தமிழகம்: சென்னைக்கு வெளியே 7 மணிநேரம் மின்வெட்டு… உற்பத்தி பாதிப்பு, தொழிலாளர் பணியிழப்பு!


தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி குறைந்துள்ளதால் ஏழு மணி நேரம் வரை மின் வெட்டு அமலாக்கப்படுகிறது. இந்த மின் வெட்டினால் மாநிலம் முழுவதும் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் அதிகபட்சம் மூன்று முதல் நான்கு மணிநேரமாக இருந்தது மின்வெட்டு. அதுவும் கோடையில்தான் இந்த மின்வெட்டு இருக்கும். மழைக் காலங்களில் ஒருபோதும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டதில்லை. மழை, காற்று, இடி போன்ற இயற்கை தடைகளால் சில மணிநேரம் அவ்வப்போது மின்சாரம் நிற்கும்.

கடந்த 2010-ம் ஆண்டில் கூட மின்வெட்டு என்பது செப்டம்பர் மாதம் வரை நீடித்தது. மீண்டும் பிப்ரவரி 2011-ல் அமலுக்கு வந்தது.

ஆனால் இப்போதோ கோடை, மழைக்காலம் என எந்த பேதமும் இன்றி ஒரே சீராக தொடர்கிறது, மின்வெட்டு!

எவ்வளவுதான் உற்பத்தி?

தமிழக மின் நிலையங்களின் மூலம் 3,560 மெகாவாட், தனியார் மின் நிலையங்களால் 940 மெகாவாட், மரபுசாரா எரிசக்தி மூலம் 100, காற்றாலைகளால் 1,150, மத்திய தொகுப்பால் 2,060 மெகாவாட் மின்சாரம் கிடைத்துள்ளது. 800 மெகாவாட் மின்சாரம், தனியாரிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது.

இதுபோக 3,700 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் கடும் மின்வெட்டு அமலாக்கப்பட்டு வருகிறது.

இதற்கு தமிழக மின்வாரியம் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகிறது. நிலக்கரி இருப்பு குறைவு, பராமரிப்பு, நிலையங்களில் கோளாறு, தளவாட பொருட்களுக்கு பற்றாக்குறை என வரிசையாக காரணங்களை சொல்கிறார்கள்.

இதனால் சென்னை தவிர மாநிலத்தின் மற்ற பகுதிகள் பயங்கர மின் வெட்டை சந்தித்து வருகின்றன. கிட்டத்தட்ட 7 மணி நேரம் கரண்ட் இல்லை. மூன்று மணி நேரம் தொடர்ச்சியாகவும், பின்னர் 4 மணி நேரம் சுழற்சி முறையிலும் பவர் கட் ஆகிறது. குறிப்பாக வட தமிழகம் இதில் முடங்கிப் போயுள்ளது.

சென்னையில் தினமும் ஒரு மணி நேரமும் புறநகர்களில் 2 மணிநேரம் வரையிலும் மின்வெட்டு அமலாக்கப்படுகிறது.

தொழிற்சாலைகளில் பாதிப்பு:

இதனால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது கோவை, திருப்பூர், ஈரோடு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள்தான்.

பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பண்டிகை காலத்தில் மேற்கொள்ளப்படும், நாள்காட்டி, ஆயத்த ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவற்றின் உற்பத்தி பணிகள், மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளன.

லாந்தருக்கு மாறிய கிராமங்கள்

இரவு நேரங்களில் நீண்ட நேரம் மின்சாரமே இல்லாமல் போவதால், வேறு வழியின்றி மீண்டும் கிராமப்புறங்களில் லாந்தர், சிம்னி விளக்குகள் புழக்கத்துக்கு வந்துள்ளன.

ஏற்கெனவே பாசன வசதியில்லாமல் விவாசயம் பட்டுப் போன நிலையில், மின்சாரமும் இல்லாமல் போனதால் விவசாய வேலைகளும் முடங்கியுள்ளன.

இதற்கிடையே, மின்வெட்டோடு, விரைவில் மின் கட்டணத்தையும் தமிழக அரசு உயர்த்தவுள்ளது.

மின் கட்டணத்தை உயர்த்தச் சொல்லி தமிழக மின் வாரியம் சார்பில் கடந்த 17ம் தேதி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது வரும் 25ம் தேதி, ஆணைய சேர்மன் கபிலன் முன் விசாரணைக்கு வருகிறது. மின் வாரியம் சார்பில் அதன் தலைவர் ராஜிவ் ரஞ்சன் ஆஜராகி விளக்கம் சொல்கிறார்.

அதற்குப் பிறகு மின் கட்டணத்தை அதிகரிக்க ஆணையம் அனுமதி வழங்கும் என்று தெரிகிறது.

மின்கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என முன்கூட்டியே முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மக்களை மெல்லக் கொல்லும் ஜெயலலிதா!


‘அரசாங்கம் வியாபாரியல்ல, வருமானம் போதவில்லை, நஷ்டம் வந்துவிட்டது என்று கூறி விலையை உயர்த்தி மக்களைச் சுரண்டுவதற்கு. அத்தியாவசியப் பொருள்கள் விலைகளை உயர்த்துவது மக்களை மெல்லக் கொல்வதற்கு சமம். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தப் போக்கை கண்டித்து மக்கள் போராட்டத்தில் இறங்க வேண்டும்…’

-இதனை நாம் சொல்லவில்லை, பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொதித்துப் போய்ச் சொன்ன தீர்ப்பு இது.

மக்களை மெல்லக் கொல்ல ஆரம்பித்துவிட்டாரோ ஜெயலலிதா என்ற கேள்விதான் இந்த இரு தினங்களும் மனதை அரித்துக் கொண்டே இருக்கிறது.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகின்றன. இந்த 6 மாதங்களில் அவர் உருப்படியாக எதையுமே செய்யவில்லை. அட, செய்யாமல் போனாலும் பரவாயில்லை… இருப்பதையும் நாசமாக்கி நஷ்டத்துக்கு மேல் நஷ்டத்தையே ஏற்படுத்தி வருகிறார்.

ஆட்சிக்கு வந்த கையோடு, வழக்கம்போல திமுக அரசு கஜானாவை சுரண்டிவிட்டுப் போய்விட்டது என்ற வசதியான காரணத்தைச் சொல்லி ரூ 4000 கோடிக்கு மேல் வரிகளை உயர்த்தினார். ஆண்டுக்கு ரூ 1600 கோடிக்கு மதுபான விலைகளை உயர்த்தினார்.

இப்போது தமிழக மக்கள் இதற்கு முன்பு பார்த்தும் கேட்டும் அறியாத அளவுக்கு ஏகத்துக்கும் பால் விலை, பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளார். குறிப்பாக பஸ் கட்டணம் 70 சதவீத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு பஸ்களை மட்டுமே நம்பியுள்ள பெரும்பான்மை மக்கள், இனி மாற்று வாகனங்களை நாடியே தீர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுவிட்டனர்.

அடுத்து மின் கட்டணத்தை யூனிக்கு ரூ 1.50 அல்லது 2 வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக மின்வாரியும் அறிவித்துள்ளது.

இந்த மக்கள் விரோத செயல்கள் அனைத்துக்கும் மத்திய அரசு நிதி தரவில்லை என்றும், முந்தைய திமுக அரசு முக்கிய காரணம் என்றும் கூறி தப்பிக்கப் பார்க்கிறார்.

உண்மையில் மத்திய அரசு நிதியே தரவில்லையா?

இதோ இதே ஜெயலலிதா கடந்த ஜூன் மாதம் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவைச் சந்தித்த பிறகு கூறியதைப் படியுங்கள்:

“பிரதமர் மற்றும் திட்டக்கமிஷன் துணைத் தலைவருடனான சந்திப்பு பயனுள்ள வரையில் இருந்தது. நான் அலுவாலியாவிடம் ரூ 20000கோடிதான் தொகுப்பு நிதியிலிருந்து கேட்டேன், ஆனால் 23467 கோடி அளித்துள்ளார்கள். மிக்க மகிழ்ச்சியைத் தரும் அறிவிப்பு இது. மத்திய அரசுக்கு நன்றி,” என்று பேசிய அதே ஜெயலலிதா வாய்தான் இப்போது மத்திய அரசைத் திட்டுகிறது!

அதாவது ஜெயலலிதா கேட்டதை விட ரூ 3467 கோடியை அதிகமாகவே கொடுத்துள்ளது மத்திய அரசு.

அடுத்து, எப்போதும் போல கண்ணை மூடிக் கொண்டு அவர் குற்றம்சாட்டுவது திமுகவை. அவர்கள் கஜானாவை துடைத்துவைத்துவிட்டார்களாம். கஜானா என்பது அவர்கள் வீட்டு பீரோவா என்ன, திறந்ததும் எடுத்துக் கொண்டு போவதற்கு?

எந்தெந்த வழிகளில் பணத்தைச் சுரண்டி திமுகவினர் எடுத்துக் கொண்டார்கள் என்பதை இப்போது ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் ஜெயலலிதா வெளிப்படையாக சொல்லலாமே. அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளலாமே… யார் தடுத்தார்கள்?

இந்த விலை உயர்வு தமிழக மக்கள் அனைவர் மனதிலும் ஒரு பெரும் சவுக்கடியாய் விழுந்திருப்பதை இந்த இரு தினங்களில் நேரில் பார்க்க முடிந்தது. ஜெயலலிதா என்ன செய்தாலும் சரிதான் என ஜால்ரா அடிக்கும் ஒரு கூட்டம் வழக்கம்போல, ‘ஆஹா… ஜெயலலிதாவின் துணிச்சல் யாருக்கு வரும்’ என்று ஈனஸ்வரத்தில் முனகாமல் இல்லை.

சம்பளம் அதிகமாகிவிட்டதாம்… அதனால் இந்த விலை உயர்வு சரிதான் என்று வெட்டி நியாயம் சொல்கிறது இந்தக் கூட்டம்.

தமிழகத்தில் வேலைக்குப் போய் சம்பளம் பெறும் குடும்பம் அதிகபட்சம் 9 சதவீதம் கூட இல்லை. இதில் அரசுத் துறை பணியாளர்கள் வெறும் 2 சதவீதத்துக்கும் குறைவு. அதாவது தமிழக மக்கள் தொகையான 7.5 கோடியில் 2 சதவீதம்!

இவர்களின் வாக்குகளை மட்டுமே மனதில் கொண்டு மேலும் மேலும் சம்பளத்தை ஏற்றி வந்திருக்கிறார்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும். இதன் பலன், மாநிலத்தின் மொத்த வருவாயில் 98 சதவீதம், அரசு செலவுகள், பணியாளர் சம்பளம் மற்றும் இதர வகைக்கே போய்விடுகிறது. 98 சதவீத அரசு வருவாயை அரசுப் பணி்யாளர்களை போஷிப்பதற்கே செலவிடுகிறது அரசு. எஞ்சியுள்ள 2 சதவீத வருவாய் மற்றும் புதிய கடன்களே தமிழக மக்களின் நலப் பணிகளுக்குப் போகிறது.

இந்த உண்மையைக் கூட நாம் சொல்லவில்லை. கடந்த முறை ஆட்சியிலிருந்த ஜெயலலிதா, அரசுப் பணியாளர் விழாவில் சொன்னவை.

அரசுப் பணியாளர்களுக்கு கருணாநிதியும் ஜெயலலிதாவும் போட்டி போட்டுக் கொண்டு சம்பளத்தையும் இதர படிகளையும் உயர்த்துவது எதற்காக? ஒரு அரசுப் பணியாளருக்கு தேவைக்கும் அதிகமாகவே இன்று சம்பளம் வழங்கப்படுகிறது. மக்களிடம் வரிகளாகவும் மறைமுக வருமானங்களாகவும் சுரண்டுவதை அப்படியே அரசுப் பணியாளர்களுக்கு கொட்டுவதை நிறுத்தினாலே, பல ஆயிரம் கோடி மிச்சப்படுமே!

மக்கள் வரிப்பணத்தை மக்கள் நலத்திட்டங்களுக்கு முறையாகப் பயன்படுத்த வேண்டும். மிகக் குறைந்த ஒரு பிரிவினருக்கு மட்டுமே முழு வருமானத்தையும் செலவழித்துவிட்டு, பற்றாக்குறைக்கு கடன் வாங்கி, அந்த சுமையையும் ஏழை எளிய மக்கள் மேல் சுமத்தும் போக்கை திமுக, அதிமுக என எந்த அரசும் நிறுத்துவதாகத் தெரியவில்லை.

இந்த விலை உயர்வை சம்பளம் பெறுவோர் சமாளிக்கக் கூடும்.  கூலிகள், ஏதோ ஒரு தொழில் செய்து பிழைப்பை ஓட்டும் சாமானியர் எப்படிச் சமாளிப்பார்கள் என்று யோசிக்க வேண்டாமா?

இன்னொன்று, தேவையற்ற இலவசங்கள்.

ஆடு மாடுகள், லேப்டாப், மிக்ஸி, கிரைண்டர், பேன்… இந்த ஓட்டு லஞ்சத்தை யார் கேட்டார்கள்? இந்த இலவசங்களைத் தருவதற்காக இருக்கிறவர்களை வதைப்பது ஏன்? நீதிமன்றம் மூலம் இதற்கொரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

போலீஸ்காரர்களுக்கு வருமானமில்லையா என்ன… எதற்காக அவர்களுக்கு மலிவு விலைக் கேண்டீன்கள்? இந்த தண்டச் செலவும் மக்கள் தலையில்தானே விடியும்!

பொதுத்துறை நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாகவும், எந்த நேரத்திலும் செத்துப் போகும் நிலையில் இருப்பதாகவும் பிலாக்கணம் பாடியுள்ளார் ஜெயலலிதா.

இதற்கு முழுக்க முழுக்க ஆட்சியாளர்களே காரணம். பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் சோம்பேறித்தனம், மோசமான நடத்தை, யோக்கியமற்ற செயல்கள் போன்றவற்றை திமுக – அதிமுக அரசுகள் மாறி மாறி ஊக்கப்படுத்திக் கொண்டுதான் வந்துள்ளன. இந்த ஊக்கப்படுத்தல், கடைசியில் நிறுவனத்தையே விழுங்கும் அளவுக்குப் போயிருக்கிறது.

போக்குவரத்துத் துறையை சீரழித்ததில் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் சம பங்கு உள்ளது. 1996-97-ல் எம்ஜிஆர் போக்குவரத்துக் கழகத்தில் மட்டும் ரூ 900 கோடி நஷ்டம். இதற்குக் காரணம் என்னவென்று ஆராய்ந்தபோது, பழைய பஸ்களை சீர்படுத்தி ஓட்டுவதற்கு ஆகும் செலவு, உதிரி பாகங்கள் வாங்குவதில் அடிக்கப்படும் கொள்ளை போன்றவைதான் என்று தெரியவந்தது.

அதாவது ஒரு புதிய பஸ்ஸை வாங்கி ஓட்டுவதற்கு ஆகும் செலவை விட, பழைய பஸ்களை பராமரித்து ஓட்டும் செலவு அதிகம் என்று எம்ஜிஆர் போக்குவரத்துக் கழகத்தின் வரவு செலவை ஆராய்ந்தவர்கள் சொன்னார்கள். இருந்தும் ஏன் போக்குவரத்துக் கழகங்கள் புதிய பேருந்துக்கு மாறவில்லை? மாறிவிட்டால் எப்படி கொள்ளையடிக்க முடியும்… அதனால்தான் பழைய பஸ்களுக்கு செலவுக் கணக்குக் காட்டி, லாபத்தில் இயங்கும் நிறுவனங்களை நஷ்டக் கணக்கு காட்ட வைக்கின்றன.

அமரர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிலேயே சிறந்த பஸ் போக்குவரத்து உள்ள மாநிலம் என தமிழகம் 3 முறை விருதுகளை வென்றது. அவர் மறைவுக்குப் பிறகு அந்த விருதை தொடர்ச்சியாகப் பெற்ற ஒரே மாநிலம் கர்நாடகம்தான்.

இன்று நாட்டின் மிகக் கேவலமான ஓட்டை உடைசல் பேருந்துகளைக் கொண்ட மாநிலங்களுள் ஒன்றாகத்தான் தமிழகம் திகழ்கிறது. நான்கு வழித்தடங்களில் நான்கு பேருந்துகள் இருந்தாலே ஒருவர் கோடீஸ்வரனாகிவிட முடியும். அப்படியொரு லாபகரமான வர்த்தகம் போக்குவரத்துத் துறை. ஆனால் 95 சதவீத போக்குவரத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக ஆட்சியாளர்கள் கூறுவது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்?

நிர்வாகத்தைச் சீரமைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா முதலில் வெட்டிச் செலவுகள், ஓட்டை பஸ்களுக்கு உதிரி பாகங்கள் என்ற பெயரில் அடிக்கப்படும் கொள்ளை, லாபகரமான வழித்தடங்களில் தனியார் பஸ்கள் நன்றாக இயங்க ஒத்துழைப்பு தரும் அயோக்கிய பணியாளர்கள்… இவற்றையெல்லாம் களைந்திருந்தாலே, நிறுவனங்கள் லாபத்துக்குத் திரும்பியிருக்குமே!

இந்த விலை உயர்வு மூலம், வெளிப்பட்டிருப்பது இரண்டு விஷயங்கள்… ஒன்று ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையின்மை. இன்னொன்று, அடித்தட்டு, கிராமப்புற மக்களைப் பற்றிய அவரது அக்கறையின்மை!

5- சுஜாதாவின் “ஸ்ரீரங்கம்”


Srirangam Rajagopuram sketch by Sujatha Desikan (1993)
ஜீயர் சுவாமிகளின் விடாமுயற்சியால் இன்று இந்தியாவிலேயே மிக உயரமாக எழுந்திருக்கும் ராயகோபுரத்தைச் சுற்றிலும் என்னுடைய இளமை நினைவுகள் அநேகம் உள்ளன. அப்போதெல்லாம் அதற்கு மொட்டைக் கோபுரம் என்று பெயர்.  விஜயநகர ராயர்களின் ஆட்சிக்காலத்தின் விளிம்பில் கட்டப்பட்டதாலோ என்னவோ,  ராஜா இனிமேல் காசில்லை, தீர்ந்து போய் விட்டது என்று சொன்னதால், முற்றுப் பெறாமல் விட்டுப் போன கோபுரத்தை முடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று சின்ன வயசில் வீதிப் பயல்களிடம் கதை அளந்திருக்கிறேன். மேகத்தைத் துளைத்துக் கொண்டு ஒரு எவ்வு எவ்வினால் சந்திரன் மேல் அடியெடுத்து வைக்கலாம் என்று நான் சொன்னதை அப்போதே பலர் நம்பவில்லை. மொட்டைக் கோபுரத்தை பஸ் ஸ்டாண்டிலிருந்து அணுகும்போது வலப் பக்கத்தில் இருந்த மூலைக் கடையில்தான் என் முதன் முதல் சிகரெட் முயற்சி.
ராத்திரி வேலையாகப் பார்த்துச் சிம்னி விளக்கு வெளிச்சம் உள்ள கடையாகத் தேர்ந்தெடுத்து, முகத்துக்குக் குறுக்காகக் கைத்துண்டு போட்டு மூடிக்கொண்டு, இந்தப் பக்கம் அந்தப் பக்கம் நோக்கி வாயின் இடது ஓரமாக, ‘ஒரு சிகரெட்’ என்றேன்.
“என்ன சிகரெட்டு ?  எத்தனையோ சிகரெட்டு இருக்குது ?”
“எ…எ…எ… ஏதாவது !”
“கோதை அம்மா பேரன் தானே நீ ?  எதுக்காக மூஞ்சில சவுக்கம் போட்டிருக்கே ?”
பைசா கொடுத்ததையும் பாராமல் ஓடி வந்து விட்டேன்.

3- சுஜாதாவின் “ஸ்ரீரங்கம்”


“இன்றைய ஸ்ரீரங்கம் திருச்சி கார்ப்பரேஷனின் ஓரங்கம்.  ஏ.டி.எம்.களும் தாறுமாறான கேபிள்களும் அம்மா மண்டபத்திலிருந்து தொடர்ந்து நிற்கும் ஆம்னி பஸ்களும் பெண்கள் கல்லூரியும் புதிய பள்ளிகளும் என்ன என்னவோ நகர்களும் மேம்பாலங்களும் என்னுடைய ஸ்ரீரங்கமல்ல.”

திருவரங்கம் அரங்கநாதர் கோவில் திருப்பணியில் ஒரு சிக்கல் எழுந்தது.  ’திரு உறை மார்பன்’  என்று சிலப்பதிகாரத்தில் சொன்னபடி பள்ளி கொண்டிருக்கும் அரங்கநாதருக்கு மார்பில் ஒரு இலக்குமி வடிவம் உண்டு.
திருப்பணி செய்யும்போது அதற்கு பதில் தந்திர சாஸ்திரத்துக்கு ஏற்ப ஒரு முக்கோணம் வைத்தார்கள். அதை சில பெரியவர்கள் ஆட்சேபித்தார்கள்.  என்னை அணுகினார்கள்.
நான் அமைச்சர் தமிழ்க்குடிமகன் அவர்களுடன் பேசினேன். அவர் உடனே இதைக் கவனித்து அதிகாரிகளுடன் பேசினார். இலக்குமி மறுபடி அரங்கனின் மார்பில் பெண்கள் தினத்தன்று வாசம் செய்யத் துவங்கியிருக்கிறாள்.
இதில் ஒரு சின்ன வியப்பான சமாசாரம், திருவரங்கத்தில் ஓர் ஆஸ்திரேலியர் தன் பெயரை கேசவன் என்று மாற்றிக் கொண்டு, குடுமி வைத்துக் கொண்டு, தினம் பெருமாளுக்கு பெரியாழ்வார் மாதிரி கைங்கரியம் செய்து கொண்டு அண்மைக் காலமாக வாழ்கிறாராம். அவரிடம் தீ விபத்துக்கு முன் எடுத்த பழைய ஃபோட்டோக்களைக் காட்டியபோது, அவர் அவைகளை ஸ்கான் பண்ணி, பஜ் என்று இருந்த அந்த மார்புப் பகுதியை தன் லாப் டாப்பில் ஸ்கேன் பண்ணி, டிஜிட்டலாக அதை பெரிது படுத்தி பிழை நீக்கிப் பார்த்ததில் இலக்குமி தெரிந்தாளாம்.
எனக்கு ஒரு ஹைக்கூ தோன்றியது.
அரங்கன் சந்நிதி
வெள்ளைக்கார குடுமி பக்தர் பையில்
துளசி மாலையுடன்
லாப்டாப்!

 

நெய்வேலி க. தியாகராசன், குடந்தை.
? ஸ்ரீரங்கம் மண்ணில் அடியெடுத்து வைக்கும்போது, இன்று தங்களுக்குத் தோன்றும் முதல் உணர்வு ?
! கோவிலுக்குப் போக வேண்டும் என்பது.
எஸ்.ராமசாமி, லால்குடி.
? ஸ்ரீரங்கத்தின் ஒரு பகுதிக்கு ‘அம்மா மண்டபம்‘ என்று பெயர் வரக் காரணம் என்ன ?
! அது நாயக்கர் காலத்து ராணியின் செல்லப் பெயர் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

 

எம். மகேந்திரா முருகன், எடுத்தனூர்.

? வைகுண்ட ஏகாதசிக்கு ஸ்ரீரங்கம் சென்றீர்களா ?
! சின்ன வயசில் சென்றிருக்கிறேன்.
மஞ்சுளா கோபாலன்.
? ரங்கநாதர் கோயிலைத் தவிர ஸ்ரீரங்கத்தில் உங்களுக்குப் பிடித்த இடம் எது ?
! கீழச் சித்திரை வீதி.

கண்ணன்.
? இன்றைய ஸ்ரீரங்கம் பற்றி உங்கள் கருத்து என்ன ?
! என்னுடைய ஸ்ரீரங்கம், கோவிலில் மட்டும்தான் பாக்கியிருக்கிறது.  அதிலும் சில இடங்கள்தான்.
காந்தி.
? ஸ்ரீரங்கத்தில் முஸ்லீம்களின் சப்பாத்தி அமுதுடன் கூடிய நம்பெருமாள் தரிசனம் மகிழ்ச்சி அளித்ததா ?  தாத்பர்யம் என்ன ?
! தாத்பர்யம் கோயிலுக்கு ஒரு சிக்கலான கட்டத்தில் மத நல்லிணக்கம் தேவைப்பட்டதே.

சுமன்.
? இப்போதுள்ள ஸ்ரீரங்கத்தில் வாழ விரும்புவீர்களா ?
! சித்திரை வீதியில் என்னால் வாழ முடியும்.

பெ. பாண்டியன், திருமயம்.
? அந்தக் காலத்து ஸ்ரீரங்கத்து தேவதைகளை இப்போது பார்த்தால் அடையாளம் கண்டு புன்னகைப்பதுண்டா ?
! இப்போது அவர்களுக்கெல்லாம் வயசாகி விட்டது.  புன்னகையில் கொஞ்சம் சோகம் கலந்திருக்கிறது.

லலிதா செல்லப்பா, சென்னை – 75.
? திருப்பதி பெருமாளுக்கு இல்லாத என்ன சிறப்பு இருக்கு ஸ்ரீரங்கத்து பெருமாளுக்கு ?
! சயனம்

ஜி.மகேந்திர குமார், பாலக்காடு.
? நீங்கள் பார்த்து, அதிசயித்து, புரிந்து கொள்ள முடியாத விஷயம் உலகில் ஏதாவது உள்ளதா ?
! ‘நீலக்கடலரை மாமணி நிகழக்
கிடந்தது போல் அரவணை
வேலைத் தலைக் கிடந்த மழை முகில்’
என்று ஆழ்வார் பாடிய அரங்கன் எனது மிகப் பெரிய அதிசயம்.

RSS TOI

Follow

Get every new post delivered to your Inbox.

Join 1,611 other followers